பாக்கியம்….
பல்லவி
பாக்கியம் பெற்றேன் கந்தா உனையே
கண்டிக் கதிர்காமத் திருத்தலத்தில் காணும்
அனுபல்லவி
சாக்காடு பிணி மூப்பு பயமணுகாமல்
காக்கும் கடவுளே கேசவன் மருகனே
சரணம்
தீக்கதிரேந்தும் முக்கண்ணன் மகனே
தாக்கி சூரனை அழித்த வேலாயுதனே
ஆக்கல் அழித்தல் காத்தல் முத்தொழில்
நோக்கிடும் முழுமுதற்கடவளே முருகனே
No comments:
Post a Comment