இன்று சித்ரா பவுர்ணமி. திருமாலிருஞ்சோலை ஸ்வாமி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.
இந்த நன்னாளில் கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாளை மனத்தால், சொல்லால், செயலால் தியானித்து மேன்மையடைவோமாக.
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன்மலை
நஞ்சு உமிழ்நாகம் எழுந்து அணவி நளிர்மாமதியைச்
செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே
ஸ்ரீ கல்யாண சுந்தரவல்லி நாயிகா சமேத ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் திருவடிகளே சரணம்
திருமாலிருஞ்சோலை…….
பல்லவி
திருமாலிருஞ்சோலை அழகனைப் பணிந்தேன்
கருநாகம் நிலவையுண்ணப் படமெடுத்துத் தாவும்
அனுபல்லவி
பெருமையுடன் மணிவண்ணன் திருமால் கேசவன்
எழுந்தருளி அருட்காட்சியளித்திடும் அழகிய
சரணம்
எருதும் மருதும் காளியனும் கஞ்சனும்
பெரு வடிவெடுத்த களிறும் தத்தமது
கருமவினையால் மடிந்து வீழ்ந்திட
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
No comments:
Post a Comment