#காமாட்சி_வைபவம் - 2 தெய்வத்தின்_குரல்
காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்! தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்! மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்!
பரதேவி……
பல்லவி
பரதேவி காமாக்ஷி மலரடி பணிவோம்
ஐம்புலனடக்கிட அவள் துணை பெறுவோம்
அனுபல்லவி
அரனயனரி பணி கேசவன் சோதரி
வரதாபய கரம் நீட்டுமீச்வரி
சரணம்
கரங்களிலேந்திய வில் மனதாகவும்
பாணங்களைந்தும் ஐம்புலன்களாகவும்
வரந்தரும் கரத்தினால் இவைகளையடக்கி
நிரந்தர நிம்மதி அளித்திடுவாளன்னை
No comments:
Post a Comment