புது மலர்……
பல்லவி
புது மலர் தூவியுன் பதமலர் பணிந்தேன்
மதுரகாளி நீ மனங்கனிந்தருள்வாய்
அனுபல்லவி
சதுர்த்தசி பிறையணிந்த சர்வேச்வரியே
யதுகுலதிலகன் கேசவன் சோதரியே
சரணம்
குதுகலத்துடனே பக்தருக்கருள்பவளே
கதிரொளியை மிஞ்சும் காந்தியுடைவளே
இதிகாச புராணங்கள் போற்றும்
மதுரமொழியாளே திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment