பாஷாண ஏவ ஹரி நீலமணிர் தினேஷு
ப்ரம்லனதாம் குவலயம் ப்ரகடீகரோதி |
நைமித்திகோ ஜலத மேசகிமா ததஸ்தே
காமாக்ஷி ஶூன்யமுபமனமபாங்கலக்ஷ்ம்யா: ||52||
ஹே காமாக்ஷீ! இந்திர நீலமணியோ ஒரு கல்லைத்தவிர வேறில்லை. குவலய புஷ்பமோ பகலிலே வாடிவிடுகிறது. மேகத்தின் கருமையோ எப்போதாவது ஒரு மையத்தில் தான் ஏற்படக்கூடியதாய் இருக்கிறது. ஆகையால், உன்னுடைய கடாக்ஷ சோபைக்கு ஈடாக சொல்லக்கூடியது எதுவுமில்லை.
அம்பிகையின் கடாக்ஷத்திற்கு ஸமமாக சொல்லக்கூடிய மூன்று வஸ்துக்களான இந்திர நீலமணி, குவலயம், மேகம் ஆகியவற்றில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டி, அம்பிகையின் கடாக்ஷ லக்ஷ்மியானது நிகரற்றது என்று வர்ணிக்கப்பட்டது.
प्रम्लनतां कुवलयं प्रकटीकरोति ।
नौमित्तिको जलदमेचकिमा ततस्ते
कामाक्षि शून्यमुपमनमपाङ्गलक्ष्म्याः ॥52॥
காமாக்ஷியுந்தன்…..
பல்லவி
காமாக்ஷியுந்தன் கடைக்கண்ணிற்கீடேது
தாமரைப் பதம் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
தாமரைநாபன் கேசவன் சோதரி
பூமண்டலம் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
சரணம்
இந்திர நீலமணியோ வெறுங்கல்தான்
குவளை மலரோ வாடிவிடும் பொருளே
கருமேகமோ சில நேரங்களில் மட்டுமே
இவையனைத்துமீடல்ல கடைவிழியழகுக்கு
No comments:
Post a Comment