மீண்டும் மீண்டும்……
பல்லவி
மீண்டும் மீண்டும் காணத் தூண்டும்
ஆண்டவனே முருகா உன் அழகுத் திருமுகம்
அனுபல்லவி
தாண்டவமாடும் ஈசன் சிவன் மகனே
பாண்டவர் நேசன் கேசவன் மருகனே
சரணம்
தூண்டிலில் சிக்கிய மீனாய் இவ்வுலகில்
மாண்டும் பிறந்துமுழலுமென்னை
ஆண்டருள் கொண்டு இனியேனும் பிறவா
வரம் தர வேண்டினேன் வடிவேலனுனையே
வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் குமரனே
ஆண்டியாய்க் கோலம் கொண்டு பழனியில் கோயில் கொண்ட
தண்டபாணியே தணிகாசலனே
கண்டிக் கதிர்காமக் கந்தனே குகனே
No comments:
Post a Comment