கதிரேசனுனை…..
பல்லவி
கதிரேனுனைக் காண ஓடோடி வந்தேன்
புதிராக மறைந்து நின்று காட்சி தர மறுத்தாய்
அனுபல்லவி
எதிரே நீ நின்றாலும் உனைக் காணும் பாக்கியம்
கதிரேசன் நீயே நினைத்தாலே கிடைக்கும்
சரணம்
மதிசேகரன் மகனே மயூரவாகனனே
பதி அனுராதபுரம் தலத்துறைபவனே
மதுசூதனன் கேசவன் மருகனே
கதி நீயே பணிந்தேன் காத்தருள்வாயே
No comments:
Post a Comment