அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே .........
सूक्ष्मेsपि दुर्गमतरेsपि गुरुप्रसाद-
साहाय्यकेन विचरन्नपवर्गमार्गे ।
संसारपङ्कनिचये न पतत्यमूं ते
कामाक्षि गाढमवलम्ब्य कटाक्षयष्टिम् ॥
ஸூக்ஷ்மேऽபி துர்கமதரேऽபி குருப்ரஸாத-
ஸாஹாய்யகேன விசரன்னபவர்கமார்கே |
ஸம்ஸார பங்க நிசயே ந பதத்யமூம் தே
காமாக்ஷி காடமவலம்ப்ய கடாக்ஷயஷ்டிம் ||40||
- கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! மிகவும் நுண்ணியதும், செல்ல முடியாததுமான மோக்ஷமார்க்கத்தில் குருவின் அநுக்ரஹமென்ற துணையோடு போய்க்கொண்டிருக்கிற ஒருவன் உனது கடாக்ஷம் என்கிற ஊன்றுகோலை கெட்டியாக பிடித்துக்கொண்டு போனால் ஸம்ஸாரமாகிற சேற்றில் விழாமல் தப்புகிறான்.
அருள் தரும்……
பல்லவி
அருள் தரும் காமாக்ஷி உனையே துதித்தேன்
இருள் நீக்கி என் வாழ்வில் ஒளி ஏற்றும் தாயே
அனுபல்லவி
இரு வினைப் பயன் நீக்கும் கேசவன் சோதரி
பெருமைக் குரிய காஞ்சித் தலம் வளர்
சரணம்
குருவருளாலும் திருவருளாலும்
கருவிழியாகிய உன் கடைக்கண் என்னும்
கருவியாம் கைத்தடியின் உதவியினாலும்
சம்சாரச் சேற்றில் விழாமல் காத்த
No comments:
Post a Comment