Wednesday, 13 April 2022

அழகனை…

 



            அழகனை…


            பல்லவி

அழகனை சிவன் மகனை முருகனைத் துதித்தேன்

பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து

         அனுபல்லவி

குழலோன் கேசவன் மருகனை க்குமரனை

அழகு மயில் வாகனனை வேலாயுதனை

             சரணம்

நிழலென வள்ளி தெய்வானையுடனிருக்கும்

பழனி ஆண்டவனை தண்டாயுதபாணியை

முழுமுதல் கடவுளை முத்துக்குமரனை

பழமுதிர்ச் சோலையில் கோயில் கொண்டிருப்பவனை



No comments:

Post a Comment