தாயே மீனாக்ஷி…..
பல்லவி
தாயே மீனாக்ஷி தயை புரிவாயே
நீயே அனைத்துமென மலரடி பணிந்தேன்
துரிதம்
அரனயனரியும் அமரரும் முனிவரும்
சுரபதி ரதிபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
ஆயர் குலத்துதித்த கேசவன் சோதரி
நோயெனும் பவக்கடல் கடந்திடச் செய்பவளே
சரணம்
தீய அரக்கரை மாய்த்திடும் திரிபுரையே
ஓயாதுனைத் துதிக்குமடியாரைக் காப்பவளே
மாயே லலிதாம்பிகையே மேருவில் வீற்றிருப்பவளே
சேயெனைக் காத்திட இதுவே தருணம்
No comments:
Post a Comment