பாவங்கள்…..
பல்லவி
பாவங்கள் பல புரிந்தேன் கண்ணா கண்ணா
பாவியெனைக் காத்தருள உனைப் பணிந்தேன் கண்ணா
அனுபல்லவி
ஆவதுமுன்னால் அழிவதுமுன்னால்
கூவியழைத்தேனுனை கேசவா கண்ணா
சரணம்
தீவினைகள் புரிந்த எனை மன்னிப்பாய் கண்ணா
கூவியுனையழைத்துன் திருவடி சரணடைந்தேன்
பூவிதழ் தூவியுன் கமல பதம் துதித்தேன்
கோவில் தொறும் வந்துன் தயை வேண்டி நின்றேன்
நாகுழற உடல் தளற மேனிநடுங்கும் வேளையிலே
சாகும் நிலையில் உனையழைக்க க்கண்ணா
நோகுமென்னால் இயலாமல் போனாலும் கண்ணா
தேகநலத்துடனிருக்கும் இப்போதே சொல்லி வைத்தேன்
தேவகி மைந்தனே கண்ணா கண்ணா
தேவி ருக்மணியின் நாயகனே கண்ணா
மூவாசைப் பிணியால் கட்டுண்டேன் கண்ணா
தேவனுனையன்றி கதியில்லை கண்ணா
No comments:
Post a Comment