ப்ரபுர்தயோ தேவா: முனீந்த்ராஸ் ததா
வோடும் மூர்த்னி நகுர்வதே யததிய:
கிம்கிம் தபோ துஷ்கரம்/
த்வத்பாதாம்புஜ மானதஸ்ய ஸததம்
தீனஸ்யமே மஸ்தகே
ப்ரும்மாதி தேவர்களும் முனிவர்களும்
தாயே உன் பாத தூளி தலையில் விழ
வேண்டுமென்று எப்போதும் தவம்
செய்கிறார்கள். தீனனும், அநாதனுமான உன்னையே எப்போதும் நினைத்து வணங்கும்
என் ஶிரசில் சலங்கைகளின் இனிய
ஒலி கேட்கும் உன் திருவடிகளை
வைத்தருளுமாறு வேண்டுகிறேன்...
அம்பிகை….
பல்லவி
அம்பிகை உனையே நம்பித் துதித்தேன்
சம்புவினிடமமர்ந்த தாயே ஈச்வரியே
அனுப்பல்லவி
அம்புய நாபன் கேசவன் சோதரியே
தும்புரு நாரதரம்பையர் வணங்கிடும்
சரணம்
அம்புயத்தமரும் பிரமன் நான்முகனும்
உம்பரும் சனகாதி முனிவர்களுமிந்திரனும்
உன் பாத தூளி தம் தலையில் விழவேண்டி
தவம் செய்து பதம் பணிந்து உனை வேண்டுகின்றார்
உன்னையே நினந்து எப்போதும் வணங்கி நிற்கும்
தீனனனாதனென் தலை மீது உனது
இன்னிசை ஒலிதரும் சலங்கைகளணிந்த
திருவடி வைத்தருள வேண்டுகின்றேன்
No comments:
Post a Comment