மதுரகாளியுனை…..
பல்லவி
மதுரகாளியுனை மனமுருகி வேண்டினேன்
புதுப் பாடல் புனைந்துன் பதமலர் பணிந்தேன்
அனுபல்லவி
மதுசூதனன் மாயன் கேசவன் சோதரி
அதி கோர அரக்கர்களின் தலை கொய்த ஈச்வரி
சரணம்
சதுர்முகனும் சதுர் மறையும் துதித்துப் போற்றும்
மதி முகத்தாளே மாகாளி பைரவியே
கதம்ப வனத்தமர் திரிபுர சுந்தரியே
இதம் தருவாயென தினமுனை வணங்கினேன்
No comments:
Post a Comment