வட்டாற்று வாழுன்ன தேவார்யனும் நீ
அனந்தபுரி பத்மநாபனும் நீ
அம்பலப் புழையிலே கண்ணனும் நீ
நித்ய சர்வாதிலோக சைதன்யவும் நீ
கிருஷ்ணா நின் பாதங்கள் கூப்பிய கேசிக்கும்
கருண செய்வானெந்து தாமசிச்சு
நின்னெ சதா ஸ்துதி செய்யுன்னோரென்னில் நீ
கருணாக் கடாக்ஷங்கள் தூவிடேணம்
கண்ணா உன்….
பல்லவி
கண்ணா உன் கமலபதம் பணிந்து யாசித்தேன்
வண்ணமயானவனே குழலூதும் மாயவனே
அனுபல்லவி
மண்ணில் பிறந்துழலும் பிறப்பிறப்புச் சுழலினின்று
புண்ணியனே எனக்கு விடுதலையளித்திடவே
சரணம்
வட்டாற்றில் பள்ளிகொண்ட ஆதி கேசவனே
அனந்தபுரம் தலத்திலுறை ஶ்ரீ பத்மநாபனே
அம்பலப்புழையில் நின்றருளும் கண்ணனே
அனைத்துமான சைதன்யம் நீயே
No comments:
Post a Comment