Sunday, 3 April 2022

சிவலோகநாதன்

 பார்த்தேன்! ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!


        சிவலோகநாதன்…..


                      பல்லவி


        சிவலோகநாதன் மலரடி துதிப்போம்

        கவலை பிணியிடர் பவபயம் களைவோம்


                     அனுபல்லவி


        அவனியோர் புகழும் கேசவன் நேசன்

        தவ யோகியர் முனிவர்கள் வணங்கிடுமீசன்


                             சரணம்


        புவனந்தனில் வீணே சுற்றித் திரிந்தோம்

        உவகையுடனே உலக இன்பங்களில் திளைத்தோம்

        கவனம் முழுதும் அற்ப சுகங்ளில் வைத்தோம்

         அவலமிதை மாற்றி மனம் திருந்தி இனியேனும் 🙏🙏🙏

No comments:

Post a Comment