அனைத்தையும்….
பல்லவி
அனைத்தையும் விடுவாய் எனைத் துதித்திடுவாய்
முனைப்புடன் வணங்குவோர்க்கு கேசவன் சொன்னது
அனுபல்லவி
நினைவிலும் கனவிலும் எந்நாளுமெப்போதும்
தனையே நினைந்திடென கீதையில் சொன்னது
சரணம்
தினையளவு அவனைத் துதித்தாலும் போதும்
பனையளவு பலன்களை அள்ளி அளித்திடுவான்
வினையிடர் பவபயம் கவலைகள் போக்கிடுவான்
அனைத்து நலன்களும் தந்தருள் புரிவான்
No comments:
Post a Comment