மறையோதும் மந்திரமோ மகிமைமிகு யந்திரமோ
முறையோடு துதித்தலுமோ முத்திரையோ தியானமுமோ
வரை முறையாய்க், கதை கூறும்வல்லமை பெற்றில்லை யான்
முறையிடத்தான் நான் அறிவேன்
முழுத்துயரம் போக்கும் அது.
வேத மந்திரங்களைக் கூறவோ, மிகவும் சக்தி் வாய்ந்த யந்திரங்களை வைத்து த்யானம் செய்யவோ,
முத்திரைகள் காட்டி முறைப்படி பூஜைகள் செய்து துதிக்கவோ
பல நல்ல,துதிகளை விளக்கமாக எடுத்துக் கூறவோ,
எனக்கு ஞானமோ, அறிவோ அறவே இல்லை.
உலகிற்கே அன்னையான உந்தனிடம் எனது துயரங்கள்
யாவையும் கூறி முறையிட மட்டும்தான் தெரியும்.
உன்னையன்றி வேறு யாரிடம் முறையிட முடியும்?
அதுவே என்"துயரங்களை போக்குவதற்கு உகந்த வழியாகும்.
தேவி உன் பாத,கமலங்களே சரணம்..
ஜெய ஜெய பாலா.
ஜெய ஜெய காமாக்ஷி
ஜெய ஜெய திரிபுரசுந்தரி.
மாதே காமாக்ஷி……
பல்லவி
மாதே காமாக்ஷி திரிபுரசுந்தரியே
பாதம் பணிந்து உன்னிடமே முறையிட்டேன்
அனுபல்லவி
நீதான் எந்தன் துணை கேசவன் சோதரி
ஆதரவு தந்தென் துயரங்கள் போக்கிடுவாய்
சரணம்
வேதங்களேதும் அறிந்தவனில்லை நான்
மேதகு யந்திரமோ தந்திரமோ அறிந்திலேன்
தீதிலா முத்திரையோ தியனமோ நானறியேன்
ஓதவும் கதை கூறவும் எதுவும் தெரியாதவன்
No comments:
Post a Comment