கண்டேன் நான்…..
பல்லவி
கண்டேன் நான் ஶ்ரீ க்ருஷ்ணனை கோவிந்தனை
புண்டரீகாக்ஷனை புரந்தரவிட்டலனை
அனுபல்லவி
வண்டாடும் சோலை நடுவில் குழலூதி
அண்டபகிரண்டங்களை அசைவின்றிச் செய்தவனை
சரணம்
மண்ணையுண்ட வாயனை மாதவனைக் கேசவனை
தண்மதியைப் பழிக்கும் முகவடிவுடையவனை
பெண்ணணங்கு ராதையின் மனங்கவர்ந்த கள்வனை
வண்ண மயில்பீலி கொண்டையிலணிந்தவனை
வெண்ணை பால் தயிரை திருடியே உண்ணும்
கண்ணனை மாயனை நீல வண்ணனை
புண்ணியம் செய்தோர்க்குக் கண்ணெதிரில் தெரிபவனை
எண்ணிய வண்ணமெல்லாம் எனைப் பாட வைத்தவனை
No comments:
Post a Comment