मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन
मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण
श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥45॥
இதில் கடாக்ஷ சதகம் 45 வது ஸ்லோகம் ...... மிக முக்கியத்துவம் வாய்ந்தது .....
இதைப் பாராயணம் செய்தால் நினைப்பது நடக்கும் என்பது நிதர்சனமான உண்மை.....
மாத:, க்ஷணம் ஸ்நபய, மாம் தவ வீக்ஷிதேன,
மந்தாக்ஷிதேன ஸுஜனை ரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்ம,திமிரோத்கர,பாஸ்கரேண
ஶ்ரேயஸ்கரேண, மது,பத்யுதி,தஸ்கரேண ||45||
பொருள் !
தாயே காமாக்ஷீ! சற்றே மென்மையும், நாணமும் கூடி தாழ்ந்ததும், நல்லோர்களால் நன்கு அறியப்பட்டதும், கர்மவினையாம் இருளைச் சூரியன்போல் அழிப்பதும், உயர்வை அளிப்பதும், வண்டுகளின் ஒளியைத் திருடியதுமான உன் கடைக்கண்ணினால் சிறிது நேரமாவது என்னை நீராட்டுவாயாக
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையவளே !
கடைக்கண்ணருள்…..
பல்லவி
கடைக்கண்ணருள் தந்து காத்தருள்வாய் தாயே
விடை வாகனன் துணையே காஞ்சி காமாக்ஷி
அனுபல்லவி
அடைக்கலம் நீயே கேசவன் சோதரி
இடை சிறுத்தவளே ஏகாம்ப்ரேச்வரி
சரணம்
கன்ம வினையிருளையகற்றுமாதவனாய்
நல்லோரறிந்திடும் நலம் பல உடைய
பெண்மையின் நாணமும் மென்மையும் கூடிய
வண்டுகளின் ஒளியை திருடிய உந்தன்
No comments:
Post a Comment