காலனை…….
பல்லவி
காலனைத் தேட வேண்டாம் மனமே
காலனைத் தேட வேண்டாம்
அனுபல்லவி
ஞாலந்தனில் மனிதன் மனிதனுக்கே காலனாவான்
காலம் கண்ட உண்மை மானிடனே அறிவாய்
சரணம்
பூலோகத்தில் சிறு பூச்சிகளுக்கெமன் தவளை
காலனெனத் திரியும் தவளைக்கோ பாம்பு எமன்
நீலகண்டன் கழுத்தணியும் பாம்புக்கு கீரியெமன்
மேலுமந்த கீரிக்கு மிருகங்களே கூற்றுவன்
காலசக்கரமாய் சுழலுமிவ்வுலகில்
ஆலிலையில் துயிலும் கேசவன் நடத்தும்
கோலகலமான நாடகமே இந்த
காலனின் கோலங்கள் லீலைகளனைத்தும்
No comments:
Post a Comment