எத்தனை…….
பல்லவி
எத்தனை சொன்னாலும் புரியாதோ ராமா
மெத்தனமேன் எனக்கருள இன்னும் உனக்கு
அனுபல்லவி
பத்தரை மாற்றுப் பசும் பொன்னே கேசவனே
இத்தரையில் உனையன்றி வேறோர் தெய்வமில்லை
சரணம்
அத்தனை தெய்வங்கள் உண்டென்ற போதும்
அத்தன் சிவபெருமான் பார்வதிக்குச் சொன்னவண்ணம்
சித்தத்தில் நித்தியமும் உன் நாமமே துதித்தேன்
உத்தமனே உனையன்றி வேறெனக்கு யாருளார்
No comments:
Post a Comment