அனைத்துமறிந்தவன்…..
பல்லவி
அனைத்துமறிந்தவன் நீயே கேசவா
உனைத்துதிப்பதன்றி வேறொன்றும் செய்திலேன்
அனுபல்லவி
முனைப்புடன் துதித்திடும் அடியார்க்கெல்லாம்
அனைத்து நலன்களுமளிப்பவன் நீயே
சரணம்
வினைப்பயன்களால் கட்டுண்ட எனையே
விடுவிக்க வல்லவன் நீயென்றறிந்தே
அனைத்து தர்மங்களையும் அறவே விடுத்து
உனை மட்டுமே சரணடைந்தேன்
No comments:
Post a Comment