Saturday, 9 April 2022

சொன்ன சொல்….

 படித்தேன்! ரசித்தேன்! பாடல் புனைந்தேன்!


     சொன்ன சொல்….

                  பல்லவி

சொன்ன சொல் காத்திடுவோம் ஶ்ரீராமனைப் போல

தன்னலமில்லால் வாழ்ந்திடப் பழகுவோம்

                  அனுபல்லவி

அன்னை கோசலையின் அன்பு மகன் ரகுராமன்

தந்தைசொல் காக்க கானகம் சென்றவன்

                     சரணம்

என்ன சொல் சொல்லும் முன்னே யோசித்து நீ சொல்

சொன்னபின் யோசியாமல் சொன்னபடி செய்வாயே

இன்னலிடர் வரினும் மனம் தளராதே

பன்னக சயனன் நாராயணன் காப்பான்

No comments:

Post a Comment