கதி நீயெனவே…..
பல்லவி
கதி நீயெனவே துதித்தேன் முருகா
கதிர் காமத்துறையும் கார்த்திகேயா
அனுபல்லவி
ரதிபதியைப் படைத்த கேசவன் மருகா
மதிசேகரன் மகனே மயூர வாகனனே
சரணம்
எதிர் நின்று துதித்திடும் பக்தருக்கருள்பவனே
சதுர் முகனின் கர்வம் தீர்த்த குமரனே
சதுர்மறைகள் போற்றும் சண்முகநாதனே
புதிரானவனே சூரனை வதைத்தவனே
No comments:
Post a Comment