திருவடிச் சரணடைந்தேன்…..
பல்லவி
திருவடிச் சரணடைந்தேன் சிவபெருமானே
மறுபடிப் பிறவா வரம் பெற வேண்டி
அனுபல்லவி
மருந்தீச்வரனே கேசவன் நேசனே
அருமறைப் பொருளே செழுநீர்த்திரளே
சரணம்
இருவினைப் பயன்கள் தொடராதிருக்கவும்
கருவிலினியும் உருவாகாதிருக்கவும்
எருது வாகனனே எனையாளுமீசனே
திருப்பெருந்துறையுறையும் மாணிக்கமே
No comments:
Post a Comment