ந தாதோ ந மாதா ந பந்துர்
ந தாதா ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ
ந பர்த்தா ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர்
மமை வ கதிஸ்த்வம் கதிஸ்த்வம்
த்வமேகா பவானீ
பெற்றோரோ,உற்றாரோ,
மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,பணமோ ,
என் அறிவோ,
என்னைக் கடைதேற்ற வல்ல துணையல்ல;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானீ !
கதி நீயே….
பல்லவி
கதி நீயே தாயே பவானீ
துதி செய்தேன் உனயே கேசவன் சோதரி
அனுபல்லவி
மதியணிந்தவளே மாகாளி பைரவி
சதுர் மறையும் சதுர் முகனும் பணிந்திடுமீச்வரியே
சரணம்
உற்றார் சுற்றமோ உடன் பிறந்தாரோ
பெற்ற மக்களோ செல்வமோ புகழோ
கற்றறிவோ கைப்பிடித்த மனையாளோ
மற்றெதுவும் துணையல்ல பற்றினேன் மலர்ப்பதம்
No comments:
Post a Comment