சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்
வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே
அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்
வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா
மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி
மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே
வேதமுதலான……
பல்லவி
வேதமுதலான மெய்ப்பொருளே மீனாக்ஷி
ஆதி பராபரையே எனக்கருள் புரிவாயே
அனுபல்லவி
சோதியே சுடரே கேசவன் சோதரியே
பாதகஞ்செய்த அரக்கரை மாய்த்தவளே
சரணம்
மேதினியோர் போற்றுமாரணங்கே அற்புதமே
பாதி மதியணிந்த சங்கரியே அம்பிகையே
பூதலத்தில் எண் திசைக்குத் தாயான ஈச்வரியே
காதணியையெறிந்து முழுமதி படைத்தவளே
சீதக் கயிலாய மலை வளரும் பேரொளியே
தீதிலா மேருவெனும் பொன்மலையமர்ந்தவளே
சாதித்த புண்ணியர்க்கு கண்ணெதிரே தெரிபவளே
மாதரசே தேவி மதுரை வளர் கருங்குயிலே
No comments:
Post a Comment