தங்க ரதத்தில்…..
பல்லவி
தங்க ரதத்தில் அழகுடன் பவனி வரும்
மங்கை காமாக்ஷியை மனமாரத்துதித்தேன்
துரிதம்
நாதஸ்வரங்கள் இன்னிசை முழங்கிட
கீதங்கள் பாடி மங்கயருடன் வர
இந்திரன் சந்திரன் பானுவும் நந்தியும்
வந்தனை புரிந்து மலர்தூவி வழிபட
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் சோதரியை
திங்கள் பிறையணிந்த மதி முகத்தாளை
சரணம்
சங்கரனேகாம்ரேசவரனுடனிருக்க
தங்கம் வைரம் மணிமாலை மலர்மாலை
அங்கம் தனிலெழிலோடு அலங்காரமாய்த்திகழ
சிங்காரமாயமர்ந்து பங்கய கரத்துடனே
No comments:
Post a Comment