காலிகா திமிர குந்தலாந்த கன ப்ருங்க மங்கல விராஜினீம்
சூலிகா சிகரமாலிகா வலயமல்லிகா ஸுரபிஸெளரபாம்மி
வாலிகா மதுரகண்டமண்டலமனோ ஹராநநஸரோருஹாம்
காலிகா மகில நாயிகாம் மநஸி பாவயாமி பரதேவதாம் II
कालिकातिमिरकुन्तलान्तघनभृङ्गमङ्गलविराजिनीं
चूलिकाशिखरमालिकावलयमल्लिकासुरभिसौरभाम् ।
वालिकामधुरगण्डमण्डलमनोहराननसरोरुहां var वालिकाचतुर
बालिकामखिलनायिकां मनसि भावयामि परदेवताम् ॥ ९॥ (१)
அகில உலகத்துக்கும் நாயகியான காளிபரதேவதையை மனதில் த்யானிக்கிறேன். அவள் மிகக்கரிய கூந்தல் கத்தையுடன் விளங்குகிறாள். தலைக்கு மேல் அலங்காரமாக வைத்துக் கொள்ளப்பட்ட மல்லிகை, மிகுந்த நறுமணத்தை கூட்டுவிக்கிறது. தாமரை மலரொத்த முகத்தின் வசீகரத்தன்மை, அந்த தேவியின் மிருதுவான கன்னத்துக்கப்பால் மேலும் அதிகரித்துள்ளது.
அகில லோக நாயகியை….
பல்லவி
அகில லோக நாயகியைக் காளியைத் துதித்தேன்
சகலமும் அவளெனவே மலர்ப்பதம் பணிந்து
அனுபல்லவி
இகபர சுகம் தரும் கேசவன் சோதரியை
பகலவன் கதிரெனத் திலகமணிந்தவளை
சரணம்
புகை நிறக் கருங்கூந்தல் மல்லிகை மணமும்
முகத்தாமரையின் பொலிவும் அழகும்
திகழும் கன்னங்களின் வண்ணங்களுடனே
சகலரும் வணங்கிடும் பரதேவதையை
No comments:
Post a Comment