இனியொரு பிறவி…….
பல்லவி
இனியொரு பிறவி எடுக்காமல் தடுத்தெனை
தனிக்கருணை பொழிவாயே தாயே காமாக்ஷி
அனுபல்லவி
பனிமலை நாதன் மனங்கவரீச்வரி
முனிவரமரர் பணி கேசவன் சோதரி
சரணம்
பனிதரும் திங்களும் பாம்புமணிந்த
புனிதவதியே புவி போற்றுமீச்வரியே
சனி பாம்புடனே கோள்களனைத்தும்
வணங்கிடும் ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment