கண்டேன் கண்டேன்……
பல்லவி
கண்டேன் கண்டேன் கதிர் காமக் கந்தனை
கொண்டேன் கொண்டேன் ஆனந்தம் மனத்தினில்
அனுபல்லவி
கொண்டாடி இசைபாடிக் கும்பிடப் போன என்னைத்
திண்டாட வைத்து திரை மறைவில் நின்றவனை
சரணம்
புண்டரீகாக்ஷன் கேசவன் மருகனை
வண்டார் குழலி வள்ளி மணாளனை
தொண்டர்கள் பணிந்தேத்தும் சண்முகநாதனை
எண்திசையும் புகழ் விளங்கும் சிங்காரவேலனை
விண்டுரைக்க முடியாத பேரழகுடையவனை
கண்டோர் மனம் களிக்கச் செய்திடும் குமரனை
அண்ட சராசரங்களனைத்தையும் ஆண்டருளும்
பண்தடார கோலம் கொண்ட தண்டாயுதபாணியை
No comments:
Post a Comment