விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் !
#வினை_தீர்க்கும்
#கணபதியின்_திருநாமங்கள்
ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன்
ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்
கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன்
கஜகர்ணன் - யானைக்காது உடையவன்
லம்போதரன் - பெரிய வயிறு உடையவன்
விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்
விக்னராஜன் - தடைகளுக்கு அரசன்
விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்
தூமகேது - தீப்போல் சுடர்பவன்
கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்
பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன்
கஜானன் - யானைமுகத்தோன்
வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன்
சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்
ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன்
ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்
பலப் பல பெயருடைய……..
பல்லவி
பலப் பல பெயருடைய கரிமுகனைத் துதித்தேன்
அலகிலா விளையாடல் பல புரிந்த கணபதியை
துரிதம்
விநாயகன் ஹேரம்பன் வேழமுகன் ஐங்கரன்
கணாதிபன் வாரணமுகன் பிள்ளையார் கணேசனென
அனுபல்லவி
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு புகழென
நலமனைத்தும் நல்கிடும் கேசவன் மருகனை
சரணம்
சுமுகன் ஏகதந்தன் கபிலவர்ணன் கஜகர்ணன்
லம்போபதரன் விகடன் ஶ்ரீ விக்ன ராஜன்
கஜானனன் பாலசந்திரன் தூமகேது
வக்ரதுண்டன் சூர்ப்பகர்ணன் கணாத்யக்ஷனென
No comments:
Post a Comment