ஆடி வெள்ளியில்…..
பல்லவி
ஆடிவெள்ளியில் உனை நாடி வந்தேன் தாயே
தேடிவந்த எனைத் தள்ளலாகுமோ நீயே
அனுபல்லவி
வேடிக்கையாயுலகை படைப்பதும் காப்பதும்
வாடிக்கையாய்க் கொண்ட கேசவன் சோதரியே
சரணம்
ஓடி வந்துன் மலரடி பணிந்தேன்
பாடிப்பரவினேன் உன் புகழையெல்லாம்
மோடி செய்யாமலே எனைக்காத்தருள்வாய்
கோடி வினைதீர்க்கும் ஶ்ரீ லலிதாம்பிகையே
No comments:
Post a Comment