#ஜாதாபராதாமபி_மாம்_அநுகம்ப்ய_கோதே
#கோப்த்ரீ_யதி_த்வமஸி_யுக்தமிதம்_பவித்யா:
#வாத்ஸல்ய_நிர்பரதயா_ஜநநீ_குமாரம்
#ஸ்தந்யேந_வர்த்தயதி_தஷ்ட_பயோதராऽபி
கோதாஸ்துதி 27
உன்னால் அனைத்தும் பெருமை பெறுகின்றன. எமக்கெல்லாம் நீ யாராக இருக்கின்றாய்? ஜகந்மாதாவாக இருக்கின்றாய். எங்கள் குற்றங்களையெல்லாம், உன் அநுக்ரஹம் அல்லவோ வெள்ளம்போல் அடித்துச் செல்கிறது! உலகிலே தாய் தன் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, அவளது கொங்கையைக் குழந்தை கடித்துவிட்டால் பால் கொடுப்பதை நிறுத்திவிடுவாளா? அன்பின் மிகுதியால், அதைப் பொருட்படுத்தாது பாலூட்டுகிறாளல்லவா! அதுபோலவே தாயான நீயும் எங்களை, எவ்வளவு அபராதங்கள் செய்தாலும், உன் அருளின் மிகுதியால் காக்கின்றாய்!
MEANING:
O GodhA piratti! It is fitting indeed that You protect me out of Your limitless mercy, even if I have committed many aparAdhams (acts not sanctioned by SaasthrAs). Is it not true that a Mother nourishes her baby out of the great affection for it, even if that baby bites the breast of the very mother feeding it? The mother does not get angry at the child that she loves and does not stop feeding it. Thus, it is appropriate that You protect me, the undeserving one
27.Oh Godhaa, though I have commited many crimes , you have been merciful to me,
As you are my protector, and I think it is proper for a mother ,
जातापराधमपि मामनुकम्प्य गोदे गोप्त्री यदि त्वमसि युक्तमिदं भवत्या।
वात्सल्यनिर्भरतया जननी कुमारं स्तन्येन वर्धयति दष्टपयोधराऽपि॥२७॥
அரவணைத்தெனையே…..
பல்லவி
அரவணைத்தெனையே ஆண்டருள்வாயே
பரந்தான் கேசவன் மனங்கவர்ந்த என் தாயே
அனுபல்லவி
அரங்கன் அணியும் முன்னே மாலைதனைத்தானே
பரவசமாய்ச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
சரணம்
பால் பருகும் குழந்தை தன் தாய் மடியைக் கடித்தால்
தண்டிக்கும் தாயார் ஏதுண்டு இவ்வுலகில்
எடுத்தணைத்து மீண்டும் பாலூட்டவே செய்வாள்
அதுபோல அன்னையே கோதாப்பிராட்டியே
No comments:
Post a Comment