புதிதாய்ப் பல பாடல்கள்…..
பல்லவி
புதிதாய்ப் பல பாடல்கள் உனைப் போற்றி நான் பாட
மதுராபரி அரசே கேசவனே வரமருள்வாய்
அனுபல்லவி
இதிகாச புராணங்கள் எதுவும் நான் படித்ததில்லை
எதுகை மோனையெனுமிலக்கணங்களறிந்ததில்லை
சரணம்
பதிகங்கள் பாயிரங்கள் தோத்திரங்கள் பயின்றதில்லை
அதிகம் முறையான கல்வியும் கற்றதில்லை
கதியுந்தன் பதமென்றே அனுதினம் துதித்தேன்
துதிப்பவர்க்கருளும் கருணாநிதியே
No comments:
Post a Comment