பாரத நாடுதனை…..
பாரத நாடுதனைப் போற்றிப் பாடி
பரவசமடைந்தேன் மெய்யின்பம் கொண்டேன்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீரென
பாரதி சொன்னதை நினைவில் கொண்டு
பாரனைத்திற்கும் திலகமாய்த் திகழும்
பாரத நாடு பழம் பெரும் நாடு
வீரர் பலர் நிறைந்த புண்ணிய பூமி
குமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்த நாடு
அரனயன் கேசவன் வாரணமுகனெனவும்
சரவணனம்பிகையெனப் பல கடவுளையும்
கரம் சிரம் பணிந்து வழிபடும் நாடு
புரவலர் போஷகர் நிறைந்த நந்நாடு
தரமுள்ள பொருள்பல உருவாக்கும் நாடு
திறன் படைத்த இளைஞர்கள் உருவாகும் நாடு
பரம்பரைப் பெருமைகள் பல படைத்த நாடு
தீரத்திலும் படை வீரத்திலும் உயர் நாடு
No comments:
Post a Comment