ஒரு முறையேனும்…..
பல்லவி
ஒரு முறையேனும் உனைக்காண வேணும்
திருமாலே கேசவா அருள் புரிவாயே
அனுபல்லவி
அருமறை புராணங்களனைத்தும் போற்றும்
பெருமைகளுடைய அருமா கடலமுதே
சரணம்
தரும நெறிகாக்க தரணியிலவதாரம்
விரும்பி எடுத்தவனே கருமுகில் வண்ணனே
திருமகள் மார்பனே தீனசரண்யனே
இருவினைப் பயனால் யான் படுந்துயர் நீங்கி
No comments:
Post a Comment