#க்ருஷ்ணரூபாணி_அஸங்க்யாநி......#கண்ணனின்_திருக்கோலங்கள்_எண்ணற்றவை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திருக்கோலத்தில் ஈடுபாடு.
நம்மாழ்வாருக்கு உரலோடு கட்டுண்டு ஏங்கியிருந்த கோலத்தில் மயக்கம்.
குலசேகராழ்வாருக்கு அழுகையும் அஞ்சு நோக்கும் கூடிய கோலத்தில் இன்பம்.
ஸ்வாமி தேசிகனுக்கு வேணுகோபால திருக்கோலத்தில் ஆசை.
பீஷ்மருக்கோ இதையெல்லாம் விட வேறொரு திவ்ய ஸேவை.யுத்தத்தில் பார்த்தஸாரதியாய் எதிரே நின்ற ஸேவையில் ஈடுபாடு.
கண்ணன் திருக்கோலம்….
பல்லவி
கண்ணனின் திருக்கோலம் காணவே பேரின்பம்
மண்ணையுண்டவாயன் கேசவன் மாதவன்
அனுபல்லவி
மண்ணாசை விட்டொழித்த கங்கை மைந்தனுக்கு
கண்ணனை சாரதியாய் காணவே விருப்பம்
சரணம்
கண்ணன் சிறுபிள்ளையாய் வெண்ணையுண்ட வாயனாய்
கண்டிடவே குலசேகரப் பெருமாளின் விருப்பம்
புண்ணியம் செய்த குருகூர் நம்பிக்கோ
உரலில் கட்டுண்டவனைக் காண மிக ஆசை
வேணுகோபாலனெனுமழகிய கோலத்தில்
காணவே வேதாந்த தேசிகரின் விருப்பம்
ஆணழகன் கண்ணணுக்கோ பல பல ரூபங்கள்
மாணப் பெரியதவன் வடிவங்களனைத்தும்
No comments:
Post a Comment