एषा तवाक्षिसुषमा विषमायुधस्य
नाराचवर्षलहरी नगराजकन्ये ।
शङ्के करोति शतधा हृदि धैर्यमुद्रां
श्रीकामकोटि यदसौ शिशिरांशुमौलेः ॥93॥
ஏஷா தவாக்ஷிஸுஷமா விஷமாயுதஸ்ய
நாராசவர்ஷ லஹரீ நகராஜகன்யே |
ஶம்கே கரோதி ஶததா ஹ்ருதி தைர்யமுத்ராம்
ஸ்ரீகாமகோடி யதஸௌ ஶிஶிராம்ஶு மௌலே: ||93||
தொலைவில் நீ…..
பல்லவி
தொலைவில் நீ இருந்தாலும் தாயே காமாக்ஷி
சிலைவடிவில் எழுத்தருளி அடியார்க்கருள்பவளே
அனுபல்லவி
கலைமகள் நாதன் பிரமனைப் படைத்த
அலைமகள் நாயகன் கேசவன் சோதரி
சரணம்
மலைமகளே காமகோடி காமாக்ஷியுந்தன்
களையான கடைக்கண் மன்மத பாணங்கள்
நிலையாக வீற்றிருக்கும் சந்திரசேகரன் மனதை
நிலைகுலையச்செய்து அலைபாய வைக்கிறது
No comments:
Post a Comment