விதம் விதமாகவே……
பல்லவி
விதம் விதமாகவே நிதம் காட்சியளித்திடுமுன்
பதம் தனைப் பணிந்தேன் காமாக்ஷி எனக்கருள்வாய்
அனுபல்லவி
கதம்ப வனந்தனில் வாசம் புரிபவளே
சிதம்பரநாதன் சிவன் மனங்கவர்ந்தவளே
சரணம்
சதமல்ல இவ்வுலக வாழ்வென்றறிந்தே
முதம் பெற வேண்டித் துதித்தேன் உனையே
இதமுடன் எனையே பரிந்தெடுத்தணைத்து
உதவிட வேண்டினேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment