Sunday, 14 August 2022

மங்களம் தரும்….


நீலாம்புத நிகாஸாய வித்யுத் ஸத்ரு ச வாஸஸே தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதாயாஸ்து மங்களம் தாப்யாம் ஸம்ப்ரார்த்தி தாயாத ப்ராக்ருதார்பகரூபிணே யஸோதாய க்ருஹம் பித்ரா ப்ரார்பிதாயாஸ்து மங்களம்

நீருண்ட மேகம் போன்ற நிறத்தையுடையவரே, மின்னல் போன்று ஒளிவீசும் ஆடை தரித்தவரே, தேவகி-வசுதேவரின் அருந்தவத்தால் அவதரித்து, அவர்களால் போற்றப்பட்ட பரந்தாமா, நமஸ்காரம். பிறகு அவர்களிடமிருந்து பிரிந்து, தந்தையார் வசுதேவரால் ஒப்படைக்கப்பட்டு, யசோதையிடம் பாலகனாக வளர்ந்து வந்த பரம்பொருளே... கிருஷ்ணா, நமஸ்காரம்.

मङ्गलं यादवेन्द्राय महनीयगुणात्मने

वसुदेवतनूजाय वासुदेवाय मङ्गलम्॥१॥

किरीटकुण्डलभ्राजदलकैर्यन्मुखश्रिये

श्रीवत्सकौस्तुभोद्भासिवक्षसे चास्तु मङ्गलम् ॥२॥

யாதவ குலத் தோன்றலே, கிருஷ்ணா உமக்கு நமஸ்காரம். நல்லறிவு வழங்கும் மகானே நமஸ்காரம். வசுதேவரின் மகனாக அவதரித்த வாசுதேவனே நமஸ்காரம். கிரீட, குண்டலங்களின் பேரொளியால் துலங்கும் பேரழகனே நமஸ்காரம். ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி போன்ற மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் கிருஷ்ணா, நமஸ்காரம்.


नीलांबुदनिकाशाय विद्युत्सदृशवाससे।

देवकीवसुदेवाभ्यां संस्तुतायास्तु मङ्गलम्॥३॥

ताभ्यां संप्रार्थितायाथ प्राकृतार्भकरूपिणे।

यशोदाया गृहं पित्रा प्रापितायास्तु मङ्गलम्॥४॥

पूतनाऽसुपयःपानपेशलायासुरारये।

शकटासुरविध्वंसिपादपद्माय मङ्गलम् ॥५॥

यशोदाऽऽलोकिते स्वास्ये विश्वरूपप्रदर्शिने।

मायामानुषरूपाय माधवायास्तु मङ्गलम्॥६॥

तृणावर्तदनूजासुहारिणे शुभकारिणे।

वत्सासुरप्रभेत्रे च वत्सपालाय मङ्गलम्॥७॥

दामोदराय वीराय यमलार्जुनपातिने ।

धात्रा हृतानां वत्सानां रूपधर्त्रेऽस्तु मङ्गलम्॥८॥

ब्रह्मस्तुताय कृष्णाय कालीयफणनृत्यते।

दावाग्निरक्षिताशेषगोगोपालाय मङ्गलम्॥९॥

गोवर्धनाचलोद्धर्त्रे गोपीक्रीडाभिलाषिणॆ।

अञ्जल्याहृतवस्त्राणां सुप्रीतायास्तु मङ्गलम्॥१०॥

कंसहन्त्रे जरासन्धबलमर्दनकारिणे।

मथुरापुरवासाय महाधीराय मङ्गलम्॥११॥

मुचुकुन्दमहानन्ददायिने परमात्मने।

रुक्मिणी परिणेत्रे च सबलायास्तु मङ्गलम्॥१२॥

द्वारकापुरवासाय हारनूपुरधारिणे।

सत्यभामासमेताय नरकघ्नाय मङ्गलम्॥१३॥

बाणासुरकरच्छेत्रे भूतनाथस्तुताय च ।

धर्माहूताय यागार्थं शर्मदायास्तु मङ्गलम्॥१४॥

कारयित्रे जरासन्धवधं  भीमेन राजभिः।

मुक्तैः स्तुताय तत्पुत्रराज्यदायास्तु मङ्गलम्॥१५॥

चैद्यतेजोऽपहर्त्रे च पाण्डवप्रियकारिणे।

कुचेलायमहाभाग्यदायिने तेऽस्तु मङ्गलम्॥१६॥

மங்களம் தரும்….

பல்லவி

மங்களம் தரும் யது நந்தனே கேசவனே

பங்கய நாபனே உனக்கென் வந்தனம் 

அனுபல்லவி

தங்க க்கிரீடம் குண்டலமணிந்தவனே 

ஶ்ரீவத்சம் கௌஸ்துபமணிந்த வாசுதேவனே

சரணம்

சங்கும்  சக்கரமும்  ஏந்தும் கண்ணனே

கருநீலவண்ணனே பட்டாடை தரித்தவனே

வசுதேவர் தேவகி மைந்தனாய்ப் பிறந்து

அசோதையிடம் வளர்ந்த பாலனே வந்தனம்


பூதனையின் பாலையும் உயிரையும் குடித்தவனே

யாதவகுலத்தோனே சகடனை வதைத்தவனே

மாதா யசோதைக்கு பூதலம் தன் வாயில் காட்டிய

மாதவனே உனது கமலபதம் பணிந்தேன்


கன்றுடனொன்றி வத்சாசுரனைக் கொன்று

சாமளாசுரனையும் திருணாவர்த்தனையும்

வென்றவனே மாயவனே மதுசூதனனே

தாமோதரனே உனக்கு என் வந்தனங்கள் 

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவனே

காளிங்கன் தலைமீது நர்த்தனம் செய்தவனே

கோபியருடனாடிப் பாடிக் களித்தவனே

நான்முகன் வணங்கிடுமுனக்கு என் வந்தனங்கள்


சுதர்சனன் சாபம் நீக்கிய மாதவனே

சங்கசூடன் தலைகொய்தவனே

அக்ரூரர் துதித்த அழகிய கேசவனே

கம்சனை வதைத்த உனக்கு என் வந்தனங்கள்


சந்தனம் பட்டுப் பீதாம்பரமணிந்தவனே

குவலயாபீடம்தனை க்கொன்றழித்தவனே

சாணூரன் முஷ்டிகனை வதைத்த ஶ்ரீகிருஷ்ணனே

மதுரா நகராளும் புண்ணியனே வந்தனங்கள்


முசுகுந்த மன்னனுக்கு மகிழ்ச்சியளித்தவனே

பலராமனுக்கிளையோனே ருக்மிணி காந்தனே

நரகாசுரனைக் கொன்ற பாமா மணளனே

வனமாலையணிந்தவனே உனக்கு என் வந்தனங்கள்


பாணாசுரனின் கரமறுத்துக் கொன்றவனே

தருமரின் யாகத்தில் பங்கேற்றவனே

ஜராசந்தனை பீமனால் வதைத்தவனே

பரமேச்வரன் துதிக்குமுனக்கு என் வந்தனம்


சிசுபாலன் கர்வம் பங்கம் செய்தவனே

குசேலனுக்கு அருள் புரிந்தவனே

துவாரகாபுரியின் மன்னனே கண்ணனே

புவனேச்வரனே உனக்கு என் வந்தனங்கள் 

 








No comments:

Post a Comment