#ஸ்ரீகௌரி_தசகம்
ஸ்ரீ கௌரி தசகம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் அருளப்பட்டது. இதைக் காஷ்மீர கிராமியப் பாடலின் ராகத்தில் பாடுவது வழக்கம். இதைப் பாராயணம் செய்ய, கௌரி தேவியின் அருளால் அனைத்து நலன்களும் பெறலாம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், ஐஸ்வர்யக் கோலம் போட்டு, நடுவில் ஐந்து முக நெய்தீபம் ஏற்றி வைத்துப் பாராயணம் செய்வது சிறப்பு.
1.லீலாரப்த ஸ்தாபித லுப்தாகில லோகாம்
லோகாதீதை:யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் I
பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
தன் லீலை(விளையாட்டு)யாக உருவாக்கப்பட்டு, காக்கப்பட்டு, பின் தன்னில் லயமாகும் உலகங்களை உடையவளும், சிறந்த யோகிகளால், மனதில் அறியத் தக்கவளும், பால சூர்யனின் நிறத்தையொத்தவளுமாகிய, தாமரை இதழ்கள் போன்ற கண்களை உடைய ஸ்ரீ கௌரி மாதாவை வணங்குகிறேன்.🌹
2. ப்ரத்யாஹார த்யான ஸமாதி,ஸ்திதி பாஜாம்
நித்யம் சித்தே நிர்வ்ருதிகாஷ்டாம் கலயந்தீம் I
ஸத்ய ஜ்ஞானானந்தமயீம் தாம் தனுரூபாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீமஹமீடே II
ப்ரத்யாஹாரம், தியானம், சமாதி நிலைகளில் இருக்கும் யோகிகளின் மனதில் பேரானந்தத்தைத் தோற்றுவிக்கிறவளும், ஸத்யம், ஞானம், மற்றும் ஆனந்த மயமாக இருக்கிறவளும், மெல்லிய ரூபமுடையவளாகவும் இருக்கிற கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
3. சந்த்ராபீடா நந்தித மந்தஸ்மித வக்த்ராம்
சந்த்ராபீடாலங்க்ருத நீலாலகபாராம் I
இந்த்ரோ பேந்த்ரா த்யர்சித பாதாம்புயுக்மாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீமஹமீடே II
சந்திரனைத் தரித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் புன்முறுவல் பூத்திருக்கும் திருமுகத்தை உடையவளும், சந்திரக்கலையால் அலங்கரிக்கப்பட்ட, கருநீல நிறமான கூந்தலையுடையவளும் இந்திரன், உபேந்திரன் முதலான தேவர்களால் அர்ச்சிக்கப்படும் திருவடித்தாமரைகளை உடையவளுமான ஸ்ரீ கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
4.ஆதிக்ஷாந்தா மக்ஷரமூர்த்யா விலஸந்தீம்
பூதே பூதே பூதகதம்ப ப்ரஸ வித்ரீம் I
சப்தப்ரஹ்மானந்தமயீம் தாம் தடி தாபாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
அகாராதி க்ஷகாராந்தமான அக்ஷரங்களின் வடிவமாக விளங்குபவளும், யுகங்கள் தோறும் ஜீவ ராசிகளைப் படைப்பவளும், சப்தப்ரஹ்மத்தின் வடிவாகவும், மின்னலின் பிரகாசமான ஒளி போன்றவளுமாகிய ஸ்ரீ கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
5.மூலாதாராத் உத்திதவீத்யா விதிரந்த்ரம்
ஸெளரம் சாந்த்ரம் வ்யாப்ய விஹாரஜ்வலிதாங்கீம் I
யேயம் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்தமதனு ஸ்தாம்ஸுகரூபாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
மூலாதாரச் சக்கரத்திலிருந்து (குண்டலினியாக)புறப்படும் தேவி, அதே வழியில்(ஆறு சக்கரங்களின் வாயிலாக) பிரமரந்திரத்தையும், சூர்ய சந்திர மண்டலங்களையும் வியாபித்து, அந்த மகிழ்ச்சியில் ஜ்வலித்திருக்கிறாள். அணுவிற்கும் அணுவாகிய பரமாணுவாய், ஆனந்த ரூபமாய் விளங்குகிறாள். அத்தகைய ஸ்ரீ கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
6. நித்ய:சுத்தோ நிஷ்கல ஏகோ ஜகதீச:
ஸாக்ஷீயஸ்யா:ஸர்கவிதௌ ஸம்ஹரணேச I
விச்வத்ராண க்ரீடனலோலாம் சிவபத்நீம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
யாருடைய (எந்த தேவியினுடைய) உலகனைத்தையும் படைப்பதும் பின் பிரளய காலத்தில் ஒடுக்குவதுமான விளையாட்டுக்கு, நித்யனாய், சுத்தனாய், நிஷ்கலனாயிருக்கும் ஸ்ரீ ஜகதீஸ்வரனான ஈஸ்வரன் சாட்சியாய் இருக்கிறாரோ, யார் இவ்வுலகங்களைப் படைக்கும் லீலையில் உவகை கொண்டவளோ, அந்த சிவ பத்னியான கௌரி தேவியை நான் வணங்குகிறேன்.🌹
7. யஸ்யா:குக்ஷௌ லீநமகண்டம் ஜகதண்டம்
பூயோ பூய:ப்ராது ரபூத் உத்திதமேவ I
பத்யா ஸார்தம் தாம் ரஜதாத்ரௌ விஹரந்தீம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
அண்ட சராசரங்களும் மீண்டும் மீண்டும் தோன்றி, பின் யாருடைய உதரத்தில் ஒடுங்கியுள்ளதோ, அந்த அன்னையான, வெள்ளி மலையில் தன் பர்த்தாவான பரமேசுவரனோடு களிப்புடன் இருக்கும், கௌரி தேவியை நான் வணங்குகிறேன்.🌹
8.யஸ்யாமோதம் ப்ரோதமசேஷம் மணிமாலா
ஸூத்ரே யத்வத் க்வாபி சரம் சாப்யசரம்ச I
தாமத்யாத்ம ஜ்ஞானபதவ்யா கமனீயாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
இந்தப் பிரபஞ்சம் முழுதும், மணிமாலையில் கோர்க்கப்பட்டது போல் யாரிடம் மேலும் கீழும் அடங்கியிருக்கிறதோ, யார் ஆத்மஞானத்தின் வாயிலாக அறியப்படுபவளோ அந்த ஸ்ரீ கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
9.நாநாகாரை:சக்தி கதம்பைர்புவனாதி
வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வயமேகா I
கல்யாணீம்தாம் கல்பலதா மாநதிபாஜாம்
கௌரீ மம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
அம்பிகை, தன் பல்வேறு விதமான சக்திகளுடன், புவனங்களை வியாபித்து, தன்னிச்சைப்படி விளையாடும் கல்யாணியாய் இருக்கிறாள். கல்பகக் கொடி போல், தன்னை வணங்குபவருக்கு அருளுகிறாள். அத்தகைய ஸ்ரீ கௌரி அன்னையை நான் வணங்குகிறேன்.🌹
10.ஆசாபாச க்லேச விநாசம் விததாநாம்
பாதாம் போஜத்யான பராணாம் புருஷாணாம் I
ஈசா மீசார்தாங்கஹராம் தாம் அபிராமாம்
கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II
தன் திருவடித்தாமரைகளை சதா தியானம் செய்யும் பக்தர்களின் ஆசாபாசங்களையும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் நீக்குபவளும், சர்வேஸ்வரனது இடப்பாகத்தில் வீற்றிருப்பவளும், தாமரை இதழ்களையொத்த கண்களை உடையவளுமான ஸ்ரீ கௌரியன்னையை நான் வணங்குகிறேன்.🌹
11.ப்ராத:காலே பாவவிசுத்த:ப்ரணிதாநாத்
பக்த்யா நித்யம் ஜல்பதி கௌரீதசகம்ய: I
வாசாம் ஸித்திம் ஸம்பதமக்ர்யாம் சிவபக்திம்
தஸ்யாவச்யம் பர்வதபூத்ரீ விததாதி II
காலைநேரத்தில், மனத்தூய்மையுடன், யாரொருவர், இந்த கௌரிதசகத்தைப் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு, ஸ்ரீ பார்வதி தேவி, வாக்பலிதத்தையும், ஸகல ஸம்பத்தையும், சிவ பக்தியையும் நிச்சயம் அருளுகிறாள்.
गौरीदशकम् अथवा गौरी स्तुतिः
॥ श्रीः ॥
लीलालब्धस्थापितलुप्ताखिललोकां
लोकातीतैर्योगिभिरन्तश्चिरमृग्याम् ।
बालादित्यश्रेणिसमानद्युतिपुञ्जां
गौरीममम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ १॥
प्रत्याहारध्यानसमाधिस्थितिभाजां
नित्यं चित्ते निर्वृतिकाष्ठां कलयन्तीम् ।
सत्यज्ञानानन्दमयीं तां तनुरूपां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ २॥
चन्द्रापीडानन्दितमन्दस्मितवक्त्रां
चन्द्रापीडालंकृतनीलालकभाराम् ।
इन्द्रोपेन्द्राद्यर्चितपादाम्बुजयुग्मां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ३॥
आदिक्षान्तामक्षरमूर्त्या विलसन्तीं
भूते भूते भूतकदम्बप्रसवित्रीम् ।
शब्दब्रह्मानन्दमयीं तां तटिदाभां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ४॥
मूलाधारादुत्थितवीथ्या विधिरन्ध्रं
सौरं चान्द्रं व्याप्य विहारज्वलिताङ्गीम् ।
येयं सूक्ष्मात्सूक्ष्मतनुस्तां सुखरूपां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ५॥
नित्यः शुद्धो निष्कल एको जगदीशः
साक्षी यस्याः सर्गविधौ संहरणे च ।
विश्वत्राणक्रीडनलोलां शिवपत्नीं
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ६॥
यस्याः कुक्षौ लीनमखण्डं जगदण्डं
भूयो भूयः प्रादुरभूदुत्थितमेव ।
पत्या सार्धं तां रजताद्रौ विहरन्तीं
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ७॥
यस्यामोतं प्रोतमशेषं मणिमाला-
सूत्रे यद्वत्क्कापि चरं चाप्यचरं च ।
तामध्यात्मज्ञानपदव्या गमनीयां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ८॥
नानाकारैः शक्तिकदम्बैर्भुवनानि
व्याप्य स्वैरं क्रीडति येयं स्वयमेका ।
कल्याणीं तां कल्पलतामानतिभाजां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ ९॥
आशापाशक्लेशविनाशं विदधानां
पादाम्भोजध्यानपराणां पुरुषाणाम् ।
ईशामीशार्धाङ्गहरां तामभिरामां
गौरीमम्बामम्बुरुहाक्षीमहमीडे ॥ १०॥
प्रातःकाले भावविशुद्धः प्रणिधाना-
द्भक्त्या नित्यं जल्पति गौरिदशकं यः ।
वाचां सिद्धिं सम्पदमग्र्यां शिवभक्तिं (सम्पदं उच्चैः)
तस्यावश्यं पर्वतपुत्री विदधाति ॥ ११॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छंकरभगवतः कृतौ
गौरीदशकम् सम्पूर्णम् ॥
அலகிலா விளையாடல்…. ( ஶ்ரீகௌரி தசகம்)
பல்லவி
அலகிலா விளையாடல் பலபுரியுமன்னை
நிலவின் பிறையணிந்த கௌரியைத்துதித்தேன்
அனுபல்லவி
உலகம் யாவையும் விளையாட்டாயுருவாக்கி
நிலைத்திருக்கச்செய்ததைத் தன்னுள்ளே வைத்து
சரணம்
நலம் பல நல்கிடும் கேசவன் சோதரி
பாலசூரியனின் வண்ணம் படைத்தவள்
நீலத்தாமரை இதழ் கண்ணுடையவள்
கோலமிகு கௌரி மாதாவைப் பணிந்தேன்
சத்யம் ஞானமனந்தமயமானவளை
நித்யம் சமாதி ஆனந்த நிலையிலுள்ள
சத்திய சீலரை மகிழ்வுறச்செய்பவளை
உத்தமியை உன்னத கௌரியை வணங்கினேன்
சந்திரனையணிந்த மகிழ்ச்சியில் திளைக்கும்
சந்திர கலையொளியால் மின்னும் கருங்கூந்தலுடை
இந்திரனுபேந்திரன் துதிக்கும் பதமுடையவளை
சுந்தரி கௌரியின் கமலபதம் பணிந்தேன்
அகர உகர மகர அக்ஷர வடிவானவளை
யுகங்கள்தோறும் உயிர்களைப் படைப்பவளை
நாதப்ரம்மத்தின் உருவானவளை
மின்னல் ஒளியுடைய கௌரியை வணங்கினேன்
மூலாதாரமெனும் குண்டலினியிலெழுந்து
அறுசக்கரம்கடந்து பிரமரந்திரமடைந்து
சூரிய மண்டலத்தில் ஒளியுடனானந்தமாய்
பரமாணுவாய்த் திகழும் கௌரியை வணங்கினேன்
அகிலம்தனைப்படைத்தும் காத்துமழித்தும்
சகல செயல்களுக்கும் சாக்ஷியாய் நிற்கும்
அகிலாண்டேச்வரனின் இடப்பாகமுறைபவளை
அகிலாண்டேச்வரியை கௌரியைத் துதித்தேன்
அண்ட சராச்சரங்களனைத்தையும் படைத்து
ஊழிக்காலத்திலழித்து தன்னுள்ளே வைத்து
காத்தருள்பவளை வெள்ளிமலை வாசன்
ஈசன் நாயகியை கௌரியை வணங்கினேன்
கோர்த்த மணி மாலையென விளங்கும்
பாருலகை தன்னிடமே அணிகலனாய் வைத்திருப்பவளை
யாரொருவருள் மனத்திலறிய விழையுமந்த
நேரிழையாளை கௌரியை வணங்கினேன்
அம்புவியில் பல லீலைகள் புரிந்திடும்
அம்பிகையைக் கற்பக க்கொடியென விளங்கி
நம்புமடியார்க்கு நல்லருள் புரிபவளை
சம்புவின் நாயகியைக் கௌரியை வணங்கினேன்
கமல மலரடியைத் தினம் துதிக்குமடியார்கள்
கவலையிடர் பிணி பந்த பாசங்களை
உவகையுடன் நீக்கும் சிவகாமேச்வரியை
கமலமலர்க் கண்ணுடைய கௌரியை வணங்கினேன்
காலை வேளையிலெவரொருவரிந்த
கௌரியின் துதியை பக்தியுடன் போற்றி
படித்துத்துதித்தாலும் பார்வதியவருக்கு
சிவபக்தியும் பல நன்மைகளுமருள்வாள்
No comments:
Post a Comment