குவளைமலர் விழியாளை….
பல்லவி
குவளை மலர் விழியாளை வடிவாம்பிகையை
பவள வாயிதழாளை உமையவளைத் துதித்தேன்
அனுபல்லவி
உவகையளித்திடும் கேசவன் சோதரியை
சிவன் மனம் கவர்ந்தவளை பவ பயம் களைபவளை
சரணம்
நவமணிகள் பதித்த வளையணிந்தவளை
புவனம் போற்றும் பேரெழிலுடையவளை
துவளும் கொடியென இடையுடையவளை
தவனம் மரிக்கொழுந்து மலர்களணிந்தவளை
கவலை பிணியிடரனைத்தையும் களைபவளை
குவலயம் கொண்டாடும் பேரழகுடையவளை
தவமுனிவர் ஞானியர் துதித்திடும் குணமுடையவளை
அவனியோர் புகழ்ந்தேத்தும் சிவகாமேச்வரியை
No comments:
Post a Comment