சக்ஷுர் விமோஹயதி சந்த்ர விபூஷணஸ்ய
காமாக்ஷி தாவக கடாக்ஷ தம: ப்ரரோஹ: |
ப்ரத்யங் முகம் து நயனம் ஸ்திமிதம் முனீனாம்
ப்ராகாஶ்யமேவ நயதீதி பரம்விசித்ரம் ||59||
चक्षुर्विमोहयति चन्द्रविभूषणस्य
कामाक्षि तावककटाक्षतमःप्ररोहः ।प्रत्यङ्मुखं तु नयनं स्तिमितं मुनीनां
प्राकाश्यमेव नयतीति परं विचित्रम् ॥59॥
ஹே காமாக்ஷி! உனது பார்வையென்கிற இருட்டின் ஆவிர்பாவமானது சந்திரனை சிரோபூஷணமாக உடைய பரமசிவனுடைய கண்களை மயக்குகிறது. ஆயினும், யோகிகளுடைய உள்நோக்கியதும், அசைவற்றதுமான அறிவுக் கண்களை வெளிச்சத்துடன் விளங்க செய்கிறதென்பது ஆச்சர்யமே!
பரமேச்வரியே……
பல்லவி
பரமேச்வரியே காஞ்சி காமாக்ஷி
வரம் தரும் கரமும் அபயகரமும் நீட்டும்
அனுபல்லவி
அரனயன் கேசவன் நரர் சுரரிந்திரன்
கரம் பணிந்தேத்தும் திரிபுரசுந்தரியே
சரணம்
சிரசில் நிலவணிந்த பரமசிவன் கண்களையுன்
கருவிழியிரண்டும் மயங்கிடச் செய்தாலும்
அருந்த யோகியர்க்கு அறிவுக் கண் திறந்து
பெரு ஒளி தருவது வியப்பளிக்கின்றது
No comments:
Post a Comment