ஆடி வெள்ளியில்….
பல்லவி
ஆடி வெள்ளியில் பாடி மகிழ்ந்தேன்
தேடியுன் பதங்கள் அகிலாண்டேச்வரி
அனுபல்லவி
ஆடிய பாதம் கொண்ட ஜம்புகேச்வரன்
நாடிக் கொண்டாடிடும் கேசவன் சோதரி
சரணம்
வேடிக்கையாய்ப்பல லீலைகள் புரிவதை
வாடிக்கையாய்க் கொண்ட அகில லோக நாயகி
ஈடிணையில்லாத திரிபுரசுந்தரி
மோடி செய்யாமல் வந்தெனக்கருள்வாய்
No comments:
Post a Comment