ப்ரௌடி கரோதி விதுஷாம் நவ ஸூக்திதாடீ-
சூதாடவீஷு புதகோகில லால்யமானம் |
மாத்வீரஸம் பரிமளம் ச நிரர்களம் தே
காமாக்ஷி வீக்ஷண விலாஸ வஸந்த லக்ஷ்மீ: ||89||
காமாக்ஷீ! உனது கடாக்ஷ விலாஸமாகிற வசந்தகால சோபையானது, அறிஞர்களின் புதிய வாக்குகளின் போக்காகிற (படைப்புகள்) என்னும் மாந்தோப்பில், அறிவாளிகளாகிற குயில்களால் கொண்டாடப்பட்டு, மிகுந்த வாசனை உள்ளதுமான தேன் பெருக்கை தடையின்றி உண்டாக்குகிறது !
प्रौढिकरोति विदुषां नवसूक्तिधाटी-
चूताटवीषु बुधकोकिललाल्यमानम् ।
माध्वीरसं परिमलं च निरर्गलं ते
कामाक्षि वीक्षणविलासवसन्तलक्ष्मीः ॥ ८९॥
அடைக்கலம்…..
பல்லவி
அடைக்கலம் புகுந்தேனெனக்கருள்வாய் காமாக்ஷி
விடை வாகனன் கச்சி ஏகம்பன் துணைவியே
அனுபல்லவி
இடைக்குலத்துதித்த கேசவன் சோதரியே
உடைத்தென் பிறவிப் பிணி தீர்த்திடவே
சரணம்
கடைவிழியருளால் கவியெனும் மாம்பூக்கள்
அடையெனத்தேன் சொரிய அதையுண்டு கவிக்குயில்கள்
படைப்புகள் பலப்பல வசந்த லஷ்மியுனைப்போற்றி
தடையின்றிப் படைத்திட அருள் செய்தவளே
No comments:
Post a Comment