காமாக்ஷி ஸத்குவலயஸ்ய ஸகோத்ரபாவா-
தாக்ராமதி ஶ்ருதிமஸௌ தவ த்ருஷ்டிபாத: |
கிம் ச ஸ்புடம் குடிலதாம் ப்ரகடீ கரோதி
ப்ரூவல்லரீ பரிசிதஸ்ய பலம் கிமேதத் ||92||
कामाक्षि सत्कुवलयस्य सगोत्रभावा-
दाक्रामति श्रुतिमसौ तव दृष्टिपातः ।
किञ्च स्फुटं कुटिलतां प्रकटीकरोति
भ्रूवल्लरीपरिचितस्य फलं किमेतत् ॥92॥
காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வையானது நல்ல கருநெய்தல் மலரின் நட்பாலே சுருதியாம் வேதவழியை அடைகிறது. ஆயினும், புருவக்கொடியின் பரிச்சயத்தால் குடிலமாயுமிருக்கிறது.
சந்ததமுனையே…….
பல்லவி
சந்ததமுனையே பணிந்தேன் காமாக்ஷி
எந்தனையாண்டருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
நந்தகோபன் குமரன் கேசவன் சோதரி
சந்திரசேகரன் ஏகம்பன் நாயகி
சரணம்
உந்தன் கடைவிழியாம் கருங்குவளை மலர்கள்
சொந்தம் கொண்டாடி மறை வழி சென்றாலும்
விந்தையாய் வளைந்தவுன் புருவக்கொடியின்
பந்தத்தாலதுவும் நெளிந்து வளைந்தது
No comments:
Post a Comment