எனக்கொரு……
பல்லவி
எனக்கொரு குறையுமில்லை உனதருளாலே
கனகசிம்மாசினத்திலமர்ந்திருக்குமீச்வரியே
அனுபல்லவி
அனங்கனைப் படைத்த கேசவன் சோதரியே
வனதுர்கையும் நீயே திரிபுரசுந்தரியே
சரணம்
வனவிலங்கெனத்திரியும் மனக்குரங்கையடக்கிட
உனையே தினம் துதித்தேன் ராஜராஜேச்வரி
தனக்குவமை ஒருவரும் இல்லாதவளே
அனல் புனல் புவி காற்று நீள்விசும்புமானவளே
No comments:
Post a Comment