ऐश्वर्यमक्षरगतिं परमं पदं वा
कस्मै चिदञ्जलिभरं वहते वितीर्य ।
अस्मै न किञ्चिदुचितं कृतमित्यथाम्ब
त्वं लज्जसे कथय कोऽयमुदारभावः ॥५८॥
ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:
பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
உனது கொடைத்திறனை…..
பல்லவி
உனது கொடைத்திறனை வியந்தேன் தாயே
அனவரதமுனது மலரடியே பணிந்தேன்
அனுபல்லவி
வனமாலையணிந்த கேசவன் துணைவியே
தனமனைத்தும் தருபவளே திருவரங்க நாயகியே
சரணம்
இருகரம் சிரசின் மேலுயர்த்தி வணங்கிடும்
உனதடியார் கரங்கள் நோகுமோ என்றெண்ணி
பொருளும் முக்தியும் அனைத்துமவர்க்களித்தும்
அவை போதாதோ என நாணித் தலைகுனியும்
No comments:
Post a Comment