திருச்சக்கரம்தனில்….
பல்லவி
திருச்சக்கரம்தனிலமர்ந்திருப்பவளே
ஶ்ரீ லலிதாம்பிகையே ஈச்ரியே
துரிதம்
அரனயனரியும் அமரரும் முனிவரும்
அமரேந்திரனுமனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
திருமால் கேசவன் சோதரி நீயே
திருமீயச்சூர் வளர் ராஜராஜேச்வரியே
சரணம்
திருமகள் கலைமகள் மலைமகள் நீயே
தருமநெறி காக்க தரணியிலவதரித்த
காமாக்ஷி மீனாக்ஷி சாலாக்ஷி நீயே
பூமண்டலம் போற்றும் அகிலாண்டேச்வரியே
வருமிடர் துயர்களனைத்தையும் களைந்து
பெரும் பிணி பவக்கடல் கடந்திட வேண்டியே
அருமறைப் பொருளே அனைத்துக்குமுதலே
திருவடி பணிந்தேன் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment